முகப்பு
இந்தியா

தில்லி போராட்டத்துக்கு முன்பாக ஜம்மு - காஷ்மீரின் அமைச்சரவை விரிவாக்கம்! - முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீரின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு...

Updated On : 1 ஜூலை 2026, 8:27 pm IST
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - கோப்புப்படம்.
பகிர்:

தில்லியில், போராட்டம் நடத்துவதற்கு முன்பாக ஜம்மு - காஷ்மீரின் அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தில்லியின் ஜந்தர் மந்தரில் விரைவில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி போராட்டத்துக்கு முன்பாக ஜம்மு - காஷ்மீரின் அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக, இன்று (ஜூலை 1) முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தில்லியில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தலைமையில் இன்று (ஜூலை 1) அக்கட்சியின் கூட்டம் நடத்தினர்.

அதற்கு முன்னதாகச் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்து கோரி தில்லியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கான திட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சி விரைவில் இறுதி செய்யவுள்ளதாகவும், அமைச்சரவை மாற்றம் மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் வரும் நாள்களில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, தாச்சிகமில் கடந்த ஜூன் 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில அமைச்சர்கள் பொது விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை என சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

CM Omar Abdullah has announced that major changes will be made to the Jammu and Kashmir cabinet before the protest in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments