FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாங்சுக்கின் உண்ணாவிரதம்! மௌனம் கலைக்குமா மத்திய அரசு? ஒமர் அப்துல்லா!

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணா விரதம் குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது..

Updated On : 16 ஜூலை 2026, 3:56 pm IST
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - IANS
பகிர்:

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ளுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் தொடங்கி 18 நாள்கள் ஆகிவிட்டன. எனக்குத் தெரிந்தவரை அவருக்கு ஒரே ஒரு கோரிக்கைதான். நீட் தேர்வில் முறைகேடு. இதற்காகக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.

Advertisement

Advertisement

வாங்சுக்கின் உடல் எடை குறைந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் மத்திய அரசு எந்த அசைவும் காட்டாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் சுமார் 9 கிலோ எடையை இழந்துள்ளார். அது அவரது உடல்நிலையை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் அரசு எந்த அசைவும் காட்டவில்லை, அவரது உண்ணா விரதத்தை நிறுத்துமாறு எந்த வகையிலும் முயற்சி எடுக்கவில்லை. இதுவரை அவரிடம் எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை.

அரசியலில் எங்காவது ஒரு இடத்தில் மனிதாபிமானத்திற்கும், கருணைக்கும் இடமிருக்க வேண்டும். நீட் விவகாரத்தில் நீதி கோரும் போராட்டக்காரர்களின் கோரிக்கை தவறானது அல்ல என்று முதல்வர் கூறினார்.

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah stated that the Central Government should have urged social activist Sonam Wangchuk, who was protesting at Delhi's Jantar Mantar, to end his hunger strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments