FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீர் முதல்வரின் திருமணத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - பாயல் தம்பதிக்கு விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:07 pm IST
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - பாயல் நாத் - கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகியோரின் திருமணத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனும், தற்போதைய முதல்வருமான ஒமர் அப்துல்லா கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல் நாத் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஒமர் அப்துல்லா மற்றும் பாயல் தம்பதி இடையேயான கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கொடுமைகள் இழைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி விவாகரத்து கோரி ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த மனுக்கள் குடும்பநல நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், தனது திருமணத்தை ரத்து செய்யும்படி முதல்வர் ஒமர் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் நீதிபதி அலோக் அரதே முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அன்று விசாரணைக்கு வந்தது.

ஒமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், தம்பதியினர் தங்களுக்குள் இருந்த அனைத்து பிரச்னைகளையும் மத்தியஸ்தம் மூலம் தீர்த்துக்கொண்டு தங்களின் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக, நீதிபதிகளிடம் கூறினார்.

இதுபற்றி, நீதிமன்றத்தில் அவர் வாதாடுகையில்,

“இருவரும் தங்களின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். சட்டப்பிரிவு 142 கீழ் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் பாயல் இருவருக்கும் இடையிலான திருமணத்தை ரத்து செய்வதாகக் கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாகப் பல்வேறு நீதிமன்றங்களில் ஒமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் இருவரும் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Supreme Court has ordered the annulment of the marriage between Jammu and Kashmir CM Omar Abdullah and Payal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments