FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக புஷ்பேந்திர சிங் பதவியேற்பு!

ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பது பற்றி..

9 செப்டம்பர் 2026, 12:59 pm IST
நீதிபதி புஷ்பேந்திர சிங் - X
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி புஷ்பேந்திர சிங் பாட்டி செப். 9 (இன்று) பதவியேற்றார்.

லடாக் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, நீதிபதி புஷ்பேந்திர சிங்குக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விடுப்பில் உள்ளதால், அந்தப் பொறுப்பை வி.கே. சக்சேனா தற்போது கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த விழாவில் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி புஷ்பேந்திர சிங்கை நியமிப்பதற்காக மத்திய அரசு செப். 5ஆம் தேதி அறிவித்திருந்தது.

பொறுத்துத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி சஞ்சீவ் குமாருக்குப் பதிலாக நீதிபதி புஷபேந்திர சிங் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) நீதிபதி புஷ்பேந்திர சிங்கை தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்திருந்தது.

இதற்கு முன்னதாக புஷ்பேந்திர சிங் பாட்டி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

Justice Pushpendra Singh Bhati was sworn-in as the chief justice of the high court of Jammu and Kashmir and Ladakh on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments