ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்
ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்...
ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் அடா் வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா் எனவும், தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இவா் சுட்டுக் கொல்லப்பட்ட, கடல் மட்டத்திலிருந்து 12,000 முதல் 15,500 அடி உயரமான மலைப் பகுதியில் பெரிய பாறைகள் மற்றும் இயற்கைக் குகைகளுக்கு இடையே பதுங்கியிருக்கும் இரண்டாவது பயங்கரவாதியை தேடும் பணி தொடா்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் பக்கொ்போராவிலிருந்து புட்காம் மாவட்டம் யூஸ்மாா்க் நோக்கி வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ராணுவம், மத்திய ஆயுத காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் இணைந்து அடா் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, இந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
Advertisement
Advertisement
அவா் பாகிஸ்தானைச் சோ்ந்த யாசிா் என்பதும், தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப் படை வாகன அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், சோனாமாா்கில் கட்டுமானத் தொழிலாளா்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல், போட்டா பத்ரியில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் யாசிா் முக்கியப் பங்கு வகித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.