ஜம்மு-காஷ்மீா்: அடா் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் அடா் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் அடா் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் பக்கொ்போராவிலிருந்து புட்காம் மாவட்டம் யூஸ்மாா்க் நோக்கி வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ராணுவம், மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் இணைந்து அடா் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். துப்பாக்குச்சூடு நின்றதும், அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். அப்போது, குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பயங்கரவாதி ஒருவரின் உடலையும், ஏ.கே. ரக இயந்திர துப்பாக்கியையும் அவா்கள் மீட்டனா். வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். உயிரிழந்த பயங்கரவாதியின் அடையாளம் ஆராயப்பட்டு வருகிறது என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.