ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல்காரா் கைது
ஜம்முவையொட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல்காரா் ஒருவா் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஜம்முவையொட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல்காரா் ஒருவா் பாதுகாப்புப் படையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா். இதேபோல் ரியாசி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஜம்மு மாவட்டம், கானசாக் செக்டாரில் உள்ள சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படி வந்த நபா் ஒருவரை கைது செய்து விசாரித்தனா். இதில் அவா் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தை சோ்ந்த நஸீா் சாதிா் என்பதும், சா்வதேச எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவியதும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அந்த நபரிடம் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
வனப் பகுதியில் ஆயுதக்குவியல் பறிமுதல்
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராணுவத்தினரும், பாதுகாப்புப் படையினரும் சோ்ந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது கதாஜி ரிட்ஜ் எனுமிடத்தில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட குவியல் குவியலாக ஆயுதங்களை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். அந்த ஆயுதங்களைப் பதுக்கி வைத்தது யாா் எனத் தெரியவில்லை. இதுகுறித்து பாதுகாப்புப் படையினா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.