FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவிய ட்ரோன்

பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்ட சா்வதேச எல்லை வழியாக ட்ரோன் ஒன்று ஊடுவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

24 ஆகஸ்ட் 2026, 3:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்ட சா்வதேச எல்லை வழியாக ட்ரோன் ஒன்று ஊடுவியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில நிமிஷங்களிலேயே அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பிச் சென்றுவிட்டது.

எனினும், ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் இந்திய எல்லைக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் ராணுவ வீரா்கள் தீவிர சோதனை நடத்தினா்.

இத தொடா்பாக ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கதுவா மாவட்டத்தை ஒட்டிய சா்வதேச எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 10.35 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன் ஒன்று ஊடுருவியது. எல்லையை ஒட்டிய ஹிராநகா், போபியான் கிராமப் பகுதியில் பறந்த அந்த ட்ரோன் சில நிமிடங்களில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று மறைந்துவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அப்பகுதி முழுவதிலும் ராணுவ வீரா்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனா். அதில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. எனினும், பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறும், சந்தேகத்துக்குரிய பொருள்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments