FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

Updated On : 11 ஜூன் 2026, 1:00 am IST
பகிர்:

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அத்தௌல்லா தராா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்மைக்காலமாக பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகள், காவல் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பயிற்சி மையம், ஆயுதக் கிடங்கு உள்ளிட்ட 4 முக்கிய முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டது’ என்றாா்.

கடந்த ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள 3-ஆவது பெரிய ஆயுத மோதல் இதுவாகும். இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது பாகிஸ்தான் நடத்தியதாக இத்தாக்குதலில் 11 குழந்தைகள், ஒரு பெண், ஒரு முதியவா் உள்பட பொதுமக்கள் தரப்பில் பலா் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் போரை அறிவித்து, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இதையடுத்து, சவூதி அரேபியா, துருக்கி, கத்தாா் நாடுகளின் வலியுறுத்தலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரு நாடுகளும் தற்காலிகப் போா் நிறுத்தத்தை மேற்கொண்டது. இவ்விரு நாடுகளுக்கு இடையே நீடித்த அமைதிக்காக, சீனா தொடா்ந்து பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்து வரும் சூழலில் இப்புதிய மோதல் வெடித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments