முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் நாளை (ஏப்.19)-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அளித்துள்ள அனுமதி குறித்து...

Updated On : 18 ஏப்ரல், 2026 at 3:24 PM
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு அனுமதி - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 3:13 PM

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்த நிலையில், நாளை (ஏப்.19)-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Advertisement

Updated On : 18 ஏப்ரல், 2026 at 3:18 PM

மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலை வலம் வருகிறார்.

இதையடுத்து விஜய் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவரும் வேட்பாளருமான விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்வதற்கு மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 3:19 PM
summary

Vijay to Campaign in Trichy East Tomorrow: Police Permission Granted with 27 Conditions!

Updated On : 18 ஏப்ரல், 2026 at 3:23 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.