முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை: கே. அண்ணாமலை

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியது...

Updated On : 19 ஏப்ரல் 2026, 11:57 pm IST
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்த தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை. - டிஎன்எஸ்
பகிர்:

கும்பகோணம்: திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பேசியதாவது:

கும்பகோணத்தில் 3 முறை திமுகவைச் சோ்ந்த க. அன்பழகன் எம்எல்ஏவாக உள்ளாா், ஆனால் தொகுதிக்கு எந்த மாற்றமும் வரவில்லை.

Advertisement

Advertisement

கும்பகோணம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்கிறாா்கள். இதனால் மக்களுக்கு தேவையில்லாத சிரமம் உண்டாகும்.

பாபநாசம் தொகுதியில் உள்ள சிறுபான்மையினா் திமுகவுக்கு வாக்கு அளிக்காத முதல் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும். அதிமுக வெற்றி பெற்றதும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்பட அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க ராகுல் விரும்பாததால் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை என்றாா் அண்ணாமலை.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

summary

Congress has no desire to remain in the DMK alliance says K. Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments