முகப்பு
தற்போதைய செய்திகள்

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து...

Updated On : 24 ஏப்ரல், 2026 at 9:21 AM
தேர்தல் பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்த இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் - டிஎன்எஸ்
பகிர்:

சேலம்: கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாகிகம்பட்டியில் நடைபெற்ற வாக்குப் பதிவு மையத்தில் மல்லிகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தேர்தல் பாதுகாப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார்,

Advertisement

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

summary

Special Sub-Inspector of Police on Election Duty Dies Near Gangavalli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.