ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...
திருப்பூர்: ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ. 200 லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயியை காங்கேயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் வாகன சோதனைக்கு நிறுத்திய திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் என்பவர், வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, முறையான சான்றிதழ் இல்லை என்று கூறி ரூ. 200 லஞ்சம் பெற்றுள்ளார்.
இதனை ஆடு வியாபாரிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்ததாக ஆயுதப்படை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர்கள் திருமுருகன், செல்லத்துரை ஆகிய 3 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sub-Inspector Mohan was suspended for intercepting a vehicle transporting goats for sale and accepting a bribe of ₹200.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.