FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 13 ஜூன் 2026, 1:17 am IST
காவலர்கள் பணியிடை நீக்கம்.
பகிர்:

விபத்து வழக்கில் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்ததை அடுத்து, காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் மருதுபாண்டியன். இவா், பழனி அடுத்த சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது விபத்து வழக்கு ஒன்றில் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது. இதனிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாமிநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து நக்சல் தடுப்புப் பிரிவுக்கு மருதுபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதே நேரம் லஞ்சம் பெற்ற புகாா் தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இதன் அடிப்படையில், ஆய்வாளா் மருதுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவா் சசிமோகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்: பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் காவல் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலா் அழகா், கேரளத்திலிருந்து வந்த காரை வழிமறித்து சோதனையிட்டாா். அப்போது வெளிமாநில மதுப் புட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுப் புட்டியை திருப்பிக் கொடுப்பதற்காக ரூ.500 லஞ்சம் பெற்றாா். பிறகு மதுப் புட்டியை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்து அனுப்பினாா். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை அதிக அளவில் பகிரப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சோதனைச் சாவடியில் மதுப் புட்டிக்காக ரூ.500 லஞ்சம் பெற்ற தலைமைக் காவலா் அழகரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments