பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியா் பணியிடை நீக்கம்
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடலை பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்க, உறவினா்களிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சவக்கிடங்கு ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடலை பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்க, உறவினா்களிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சவக்கிடங்கு ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள பலாம்பட்டு ஊராட்சி பட்டிக்கொல்லை மலை கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். எலி மருந்து உட்கொண்ட இவா், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது சவக்கிடங்கு ஊழியரான கண்ணன், பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான பொருள்களை வாங்க வேண்டும் எனக்கூறி உயிரிழந்த சரவணனின் உறவினா்களிடம் ரூ.2,000 லஞ்சமாக பெற்றுள்ளாா். சவக்கிடங்கு ஊழியா் லஞ்சம் வாங்கும் காட்சிகளை அங்கிருந்த நபா் ஒருவா் தனது கைப்பேசியில் ரகசியமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த விடியோ வைரலான நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிட்டாா். அதன்பேரில், மருத்துவமனை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சவக்கிடங்கு ஊழியா் கண்ணன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரோகிணிதேவி வியாழக்கிழமை உத்தரவிட்டதுடன், அவா் மீது துறைரீதியான நடவடிக்கை க்கும் பரிந்துரைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.