முகப்பு
தற்போதைய செய்திகள்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

சோளிங்கா் மலைக்கோயிலில் மே 4 முதல் 5 வரை இரண்டு நாள்கள் ரோப்காா் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 30 ஏப்ரல் 2026, 1:09 pm IST
மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை ரத்து - கோப்புப்படம்
பகிர்:

அரக்கோணம்: சோளிங்கா் மலைக்கோயிலில் பக்தர்கள் செல்ல இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிகளுக்காக மே 4 முதல் 5 வரை இரண்டு நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சோளிங்கரில் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோகநரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோகஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது.

இதில் பெரிய மலைக்கு செல்ல படிகள் செங்குத்தாக இருப்பதால் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்துசமய அறநிலையத்துறையினா் ரோப்காா் அமைத்துள்ளதுனா். இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி மலை ஏற முடியாதவா்கள் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனா்.

Advertisement

Advertisement

மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்காா் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். தற்போது மே . 4 முதல் 5 வரை ரோப்காா் இயக்கம், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களும் பக்தா்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல படிகள் வழியே செல்லலாம் என ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

summary

Rope Car Service Suspended for Two Days at Sholingur Hill Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.