அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்க தொடங்கிய அமெரிக்கா!
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க தாக்கதல் குறித்து...
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் போர் விமானங்களிலிருந்து துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின என்று அமெரிக்க மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கையின் நோக்கங்களை விளக்கிய அமெரிக்க மத்திய தலைமையகம், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானிய ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் அந்த ஹெலிகாப்டர் வீழ்த்தியது.
Advertisement
Advertisement
"ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் மற்றும் அந்த பிராந்தியக் கடற்பரப்பில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் தகுந்த பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று கூறியுள்ளது.
பிராந்திய பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க மத்திய தலைமையகம், "ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் உள்ளது," என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிராந்திய மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜதந்திர ரீதியிலான தீர்வை நாடி வரும் சூழலிலேயே, புதன்கிழமை அதிகாலையில் நடந்த இந்த ராணுவ நடவடிக்கை வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பதிலடி நடவடிக்கையில் மூன்று கட்டத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
இந்த ராணுவ நடவடிக்கையை, அந்தச் சம்பவத்திற்கான திட்டமிட்ட மற்றும் வலுவான எதிர்வினையாகவே அமைந்துள்ளது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், "செவ்வாய் இரவு ஈரானியர்கள் நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் எனக்கு தெரிவித்தது. இந்த செயலுக்குப் பிறகு ஈரானின் பல ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா மிகக் கடுமையானதாகவும், "வலிமையான" பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
"பதிலடி மிகவும் வலுவானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என்று நம்புவதாகவும்; இந்த நடவடிக்கையும் அப்படித்தான் அமைந்துள்ளது," என்றும் இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரு பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று டிரம்ப் மேலும் கூறினார்.
மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.