டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!
உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்...
உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய போரில் சமரசம் ஏற்பட உலக நாடுகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பேச்சு தோல்வியடைந்தால் டிரம்ப் வசம் மாற்றுத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரானை அமெரிக்கா கைப்பற்றும் முனைப்பில் இருப்பதை தெளிவாகக் காட்டும் விதத்தில் டிரம்ப் தமது ‘ட்ரூத் சோசியல்’ சமூக வலைதளப் பதிவில் உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான் நாட்டின் படத்தை பதிவிட்டுள்ளதன்மூலம், ஈரானில் அடுத்தக்கட்டமாக தீவிர தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்க படைகள் ஆயத்தமாகி இருப்பதை டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
Iran fully American flag - US President Donald Trump shared a cryptic post on Truth Social showing the American flag covering Iran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.