மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும்: மமதா குற்றச்சாட்டு!
மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும் என மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு...
மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக எரிவாயு இறக்குமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் உடன் பேசிய முதல்வர் மமதா கூறியதாவது:
Advertisement
Advertisement
“மத்திய அரசு நினைத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) என்ற பெயரில் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்க முடியும். ஆனால் நாட்டின் எரிவாயு, எண்ணெய் இருப்புக்களை நிர்வகிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டம் அறிவித்ததன் பேரில், கொல்கத்தாவின் முக்கிய பகுதியான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த ஐந்து நாட்களுக்கு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Mamata has said that the central government can remove voters if it wants.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.