தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி புதிதல்ல: கார்த்தி சிதம்பரம்
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி புதிதல்ல என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளது குறித்து...
விஜய் ஆட்சி... மக்களின் முடிவு. விஜய் அழைத்ததால் மதித்து செல்கிறோம்; தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி புதிதல்ல என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் கூறியதாவது:
தவெக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றுபெற்றுள்ள தவெக தலைமையில் புதிய ஆட்சி அமைய வேண்டுமென தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலைகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அந்த மாற்றம் தவெக தலைமையில் அமைவதோடு ஒரு மதசார்பற்ற கூட்டணியாக திகழ வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, ஒருமனதாக, தவெக தலைமையில் அமையவுள்ள அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்; அவர்களின் இந்தத் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 1967-ஆம் ஆண்டு முதல் மாறி மாறி ஆட்சி செய்து வரும் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளிடமிருந்து ஒரு மாற்றத்தையே மக்கள் விரும்பினர். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மிக உறுதியாக வாக்களித்துள்ளனர்.
எனவே, இவை அனைத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, மக்கள் வழங்கியுள்ள இந்த ஆணையை மற்றும் தீர்ப்பை நாம் மதித்திட வேண்டும். இந்த ஆணை மற்றும் தீர்ப்பு ஆகியவை ஒரு மாற்றத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது, அந்த இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளில் ஒன்றின் தலைமையில் அமையாத ஒரு அரசாங்கத்திற்கான மாற்றத்தையே அவை கோருகின்றன."
இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறான செயல் அல்ல. தேர்தல்களில் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதும் வழக்கம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எந்தவொரு அரசியல் கூட்டணிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவினால், ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிட்ட பிற அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது உண்டு. இது மிகவும் சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வு தான்.
அரசியல் கட்சிகளை அணுகும் முயற்சியில், தவெக தற்போது மிகவும் தீவிரத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்.
ஒரு மதசார்பற்ற அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். அவர்களின் இந்த அணுகுமுறை விரைவில் நல்ல பலனைத் தரும் என்றும் நாம் நம்புகிறேன்.
அவர்களது இந்த அணுகுமுறையின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளான அனைத்து நிலைகளிலும் முறையான கலந்தாய்வுகளை மேற்கொண்ட பிறகே, நாங்கள் எங்கள் ஆதரவை தவெகவுக்கு வழங்கியுள்ளோம் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
The young have voted very decisively. So we must take all this into account, and we must respect the mandate and the verdict they have given
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.