முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரான் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது: டிரம்ப்

அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்து தெஹ்ரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டொனால்ட் டிரம்ப் கூறியது தொடர்பாக...

டொனால்ட் டிரம்ப். - ஏபி
பகிர்:

Trump calls Iran's response to peace proposal "TOTALLY UNACCEPTABLE"வாஷிங்டன்: மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற சூழலுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டைக் கோருதல், சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் எடுத்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்து தெஹ்ரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானைக் கடுமையாகச் சாடினார்.

ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் தெஹ்ரானைச் சாடிய டிரம்ப், 'மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து ஈரான் பிரதிநிதிகளிடமிருந்து' பெறப்பட்ட பதில் தனக்குப் பிடிக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.

ஈரான் பிரதிநிதிகளிடம் இருந்து வந்த பதிலை நான் இப்போதுதான் படித்தேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் மூலம் பிராந்தியப் பகைமைகளைத் தணிப்பதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு ஈரான் தனது எதிர்வினையைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது என ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

வாஷிங்டன் தலைமையிலான முன்னெடுப்புகள் குறித்த தெஹ்ரானின் "கருத்துகளும் பரிசீலனைகளும்", ஒரு முழுமையான "ஆய்வு மற்றும் இறுதி முடிவுகள்" எட்டப்பட்டவுடன் அனுப்பப்படும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பலமுறை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றத்தை விவரித்து, அரசுக்குச் சொந்தமான ஈரான் செய்தி நிறுவனம், "போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய உரைக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இன்று பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் மூலம் தனது பதிலை அனுப்பியுள்ளது" என்று கூறியது. இந்த ராஜதந்திர அணுகுமுறையின் உடனடி நோக்கங்களை அந்த அரசு ஊடகம் மேலும் தெளிவுபடுத்தி, "முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, இந்த கட்டத்தில், பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்" என்று கூறியது.

அறிக்கைகளின்படி, ஈரானிய வரைவில், வாஷிங்டன் "ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும்" மற்றும் "ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை" முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்பிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன. மேலும், அமெரிக்கா "பிராந்தியத்திலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும்" மற்றும் "அனைத்து விரோத நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்" என்றும், "லெபனானில் இஸ்ரேலின் போரை" முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடங்கும் என்றும் அந்த முன்மொழிவு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மோசமடைந்து வரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு மத்தியில் இந்த ராஜதந்திர முன்னெடுப்பு நிகழ்கிறது. பதிலடித் தாக்குதல்கள் தொடர்பான தனது மூலோபாயக் கட்டுப்பாட்டுக் கொள்கையை கைவிடப்போவதாக தெஹ்ரான் சமீபத்தில் வாஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை, கத்தாருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் மீதான தாக்குதல் உள்பட, புதிய கடல் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்த வளைகுடா நாடுகளின் அறிக்கைகளுடன் ஒருசேர வெளியானது.

முன்னாள் அமெரிக்க அதிபர்களின் மென்மையான போக்கையும், ஈரானுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர் கூறியதையும் கடுமையாகச் சாடிய சிறிது காலத்திலேயே டிரம்பின் இந்த சமீபத்திய தொடர் கருத்துகள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடனான ஒரு நேர்காணலின் போது, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளை வாஷிங்டன் கடுமையாகக் கண்காணித்து வருவதாகவும், அந்த இடங்களை அணுக முயற்சிக்கும் எவரையும் அமெரிக்கா தவிடுபொடியாக்கும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

மோதலின் தற்போதைய ராணுவ நிலை குறித்து பேசிய டிரம்ப், ஏற்கனவே ஈரான் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு என்றார். அந்த நாட்டின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை, தலைவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், சாத்தியமான ராஜதந்திர தீர்வுகள் குறித்து தெஹ்ரான் தொடர்ந்து தயங்கி வரும் நிலையில், அதன் உள்கட்டமைப்பு சீரழிந்துவிட்டது என்றும் கூறினார்.

மேலும், அமெரிக்கா இன்று வெளியேறினால், இஸ்லாமிய குடியரசு "மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும்" என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டனவா என்று கேட்கப்பட்டபோது, வாஷிங்டன் இன்னும் தனது பணியை முடிக்கவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்க ராணுவம் தனது இலக்குகளில் சுமார் 70 சதவீதத்தை அழித்துவிட்டதாக தெரிவித்தவர், மேலும் ஒரு தாக்குதலுக்கான சூழல் உருவாகக் கூடலாம் என்று குறிப்பிட்டார்.

தெஹ்ரானின் அணுசக்தி லட்சியங்களுக்குத் தனது நீண்டகால எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், அந்த "வெறிபிடித்த" ஆட்சி அணு ஆயுதங்களைப் பெறுவதை சர்வதேச சமூகம் அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உதவும் வகையில், பிரிட்டன் தன் டிராகன் போர் கப்பலை பாதுகாப்பு பணிக்காக அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர்க்கப்பல்களை நிறைநிறுத்தக் கூடாது. சர்வதேச நாடுகளின் இத்தகைய நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்தை மீண்சும் தொடங்குவதற்கும், கப்பல் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிராந்திய நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

summary

Iran rejected the US proposal via Pakistan, demanding an end to war, sanctions relief, release of frozen assets and control over Hormuz. Trump called Tehran’s response unacceptable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments