செய்திகள்

இந்தியாவில் 2ல் 1 நபர் தங்கள் கணினி தரவுகளை எடுப்பதில்லை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

DIN

இந்தியாவில் ஒவ்வொரு நான்கு கணினி பயன்பாட்டாளர்களில் ஒன்றுக்கும்  மேற்பட்டவர்கள் தங்கள் கணினிகளில் உள்ள தரவுகளை எடுப்பதில்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 

நவீன தொழில்நுட்ப யுகத்தில் தற்போது கணினிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கணினியில் இருந்து தரவுகள் அனைத்தையும் பயனர்கள் எடுக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேர பற்றாக்குறை மற்றும் தரவுகளின் நகல் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் தங்கள் உபயோகித்த கணினியில் இருந்து தரவுகளை எடுப்பதில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த பதில் ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட குழுவில், 24% பெண்கள் மற்றும் 36-45 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் தங்கள் தரவை எடுத்ததாகக் கூறுகின்றனர். 84% பேர் தங்கள் தரவை இழக்க வைரஸ் தாக்குதல், கணினி செயலிழப்பு அல்லது மறந்துவிட பாஸ்வேர்டு ஆகியவற்றைக் காரணமாகக் கூறுகின்றனர். 

இந்த ஆய்வினை மேற்கொண்ட வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் தனது புதிய 'மை பாஸ்போர்ட்டை - 5TB போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ்' யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள், இசை மற்றும் ஆவணங்கள் தொலைந்து போகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த ஹார்ட் டிரைவ் இருக்கும் என்று உறுதியளித்துள்ளது. 

இந்த பாஸ்போர்ட் டிரைவ்கள் பிரபலமான இ-காமர்ஸ் தளங்களிலும், சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து 1TB முதல் 5TB வரை முறையே ரூ.4,499 முதல் ரூ.10,999 வரை கிடைக்கின்றன என்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்

கும்பம்

மகரம்

உலக பாட்மின்டன் தரவரிசை: முதலிடத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஜோடி!

தனுசு

SCROLL FOR NEXT