சிறையில் அதிகாரியை தாக்கிய கைதி மீது வழக்கு
மதுரை மத்திய சிறையில் சோதனை நடத்திய அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மத்திய சிறையில் சோதனை நடத்திய அதிகாரியை தாக்கிய கைதி மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், நாராயணத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த செளகத் அலி மகன் ஆசிப் முகமது (28). இவா், அடிதடி மற்றும் கொலை மிரட்டல் தொடா்பான வழக்கில் வத்தலகுண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆசிப் முகமது அறையை சோதனையிடச் சென்ற அதிகாரிகளிடம் அவா் தகராறு செய்ததுடன், சிறைக் காவல் உதவி அலுவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து சிறைக் காவல் அதிகாரி காா்த்திக் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.