முகப்பு
இந்தியா

பணமோசடி வழக்கு: சிஎம்ஆர்எல் நிதிப் பிரிவுத் தலைவரிடம் அமலாக்கத் துறை விசாரணை!

கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியிடம் விசாரணை நடத்தியது பற்றி...

Updated On : 22 ஜூன் 2026, 1:22 pm IST
அமலாக்கத் துறை - கோப்புப்படம்
பகிர்:

பணமுறைகேடு வழக்கில் விசாரணையின் ஒரு பகுதியாக கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சுரேஷ் குமாரிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கும், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சுரேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல்-யின் தலைமை நிதி அதிகாரி சுரேஷ் குமார், கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.

Advertisement

Advertisement

சிஎம்ஆர்எல் மற்றும் எக்ஸாலாஜிக் இடையிலான நிதிப் பரிவர்த்தனை பதிவுகளைப் பராமரிக்கும் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்ததால், இந்த விசாரணை மிக முக்கியமானதாகக் கருதப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் நாள்களில் விசாரணைக்காக சிஎம்ஆர்எல்-யின் பிற மூத்த அதிகாரிகளுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பிறகு, ஜூன் 29 அன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தவித சேவையையும் பெறாமலேயே, அதற்கு சிஎம்ஆர்எல் நிறுவனம் ரூ. 2.78 கோடி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The Enforcement Directorate questioned Suresh Kumar, the Chief Financial Officer of Cochin Minerals, on Monday as part of the investigation into a money laundering case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments