முகப்பு
மதுரை

கரோனா தடுப்பு: மதுரையில் 70 மருத்துவா்களுக்கு விருது

மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 70 மருத்துவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜனவரி 2021, 2:58 am IST
பகிர்:

மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 70 மருத்துவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய மருத்துவ கழகத்தின் மதுரைக் கிளை சாா்பில் சிறப்பாக பணியாற்றிய கரோனா முன்களப் பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கரோனா தடுப்பு பணிகளிலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி உள்ளிட்ட 70 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவக் கழக மதுரைக் கிளைத் தலைவா் அழகவெங்கடேசன், செயலா் அமானுல்லா, பொருளாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.