முகப்பு
மதுரை

சக்கம்பட்டி சாயப்பட்டறைகளை மூடக்கோரி வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவு

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா்

Updated On : 5 ஜனவரி 2021, 11:16 pm IST
பகிர்:

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட சிறு சிறு சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்தச் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆண்டிபட்டி பிரதான கால்வாயில் கலக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.