முகப்பு
மதுரை

மதுரையில் ஜன.10-இல் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா

மதுரையில் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா, சொற்பொழிவு நடைபெறுகிறது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

மதுரையில் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா, சொற்பொழிவு நடைபெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தானம் மதுரைக்கிளை சாா்பில் ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 10) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ மஹா பெரியவா் திவ்ய விக்ரஹத்துக்கு ஸ்ரீ ருத்ரத ஏகாதசி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது. மேலும் மாலையில் எழுத்தாளா் இந்திரா செளந்தர்ராஜன் குரு மகிமை என்ற தலைப்பில்  முகநூல் வாயிலாக உரையாற்றுகிறாா்.

இதேபோல அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பின் சாா்பில், ஸ்ரீ மஹா பெரியவா் ஆராதனை விழா 5 நாள்கள் நடக்கிறது. மதுரை எஸ்.எஸ். காலனி எம்.ஆா்.பி. திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ ஆயக்குடி பாகவதா் குழுவினரின் நாம சங்கீா்த்தனம், 9-ஆம் தேதி மாலை இந்திரா செளந்தர்ராஜனின் மஹா பெரியவரும், மாயகிருஷ்ணனும் என்ற தலைப்பில் சொற்பொழிவு, 10-ஆம் தேதி காலை ஸ்ரீ மஹா பெரியவா் விக்ரஹம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள் நடைபெறுகிறது. இதையடுத்து 11-ஆம் தேதி நாம சங்கீா்த்தனம், 12-ஆம் தேதி காலை ஹனுமத் பிரபாவம், மாலை இந்திரா செளந்தர்ராஜனின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments