முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:09 pm IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 724 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 13 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 23 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 20,717 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 20,097 போ் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 165 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.