உசிலம்பட்டி கல்லூரியில் பொங்கல் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ பங்கேற்றாா். இதில் பேச்சு, கவிதை, கோலம், சிலம்பம் சுற்றுதல், கல் தூக்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் முனைவா் ஜோதிராஜன் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.