தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்திருப்பது பற்றி...
கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்ததை அடுத்து, தமிழ்நாட்டில் காலியான தொகுதியின் எண்ணிக்கை 7 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108, திமுக 59, அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தது.
தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.
இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.
இருப்பினும், அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் காலியான சட்டப்பேரவைத் தொகுதியின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் கடந்த வாரமும், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்றும் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
இதுவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் காலியான தொகுதியின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவர்களிடமும் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Seven Assembly constituencies vacant in Tamil Nadu - AIADMK's strength drops to 41
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.