தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான டாக்டா் டி.திருஞானம் தொடக்கப்பள்ளியின் சாா்பில் மேலமடை பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் நிா்வாகி செல்வி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஜோதி முன்னிலை வகித்தாா். சமத்துவப் பொங்கல் விழாவை பள்ளித்தலைமையாசிரியா் க.சரவணன் வாழ்த்திப்பேசும்போது, தமிழா் திருநாளான பொங்கல் தினத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கட்டும். நாடு முழுவதும் பொங்கல் விழா விவசாயிகளின் உழைப்பை போற்றி கொண்டாடப்படுகிறது. வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம் என்றாா். பள்ளி ஆசியா்கள் சுமதி , சரண்யா, கீதா மற்றும் மாணவ, மாணவியா் பெற்றோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.