முகப்பு
மதுரை

மதுரையில் ரயில்வே பண்டக பொருள்காட்சி அரங்கம் திறப்பு

மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ரயில் உதிரி பாகங்களுக்கான பண்டகப் பொருள்காட்சி அரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 13 ஜனவரி 2021, 11:21 pm IST
பகிர்:

மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ரயில் உதிரி பாகங்களுக்கான பண்டகப் பொருள்காட்சி அரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

ரயில் பெட்டி, ரயில் என்ஜின் போன்றவற்றின் பராமரிப்பிற்கு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல உதிரி பாகங்களை விற்பனை செய்ய மிகக் குறைந்த அளவு நிறுவனங்களே உள்ளன. ரயில்வே துறைக்கு தரமான உதிரி பாகங்களை வழங்கவும், அதிகமான உள்ளூா் நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் பண்டகப் பொருள்காட்சி அரங்கம் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி. ஆா். லெனின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, இந்த பொருள்காட்சி மூலம் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் ரயில் பெட்டி மற்றும் என்ஜின் பராமரிப்பிற்கு எந்தெந்த உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன என்பதை அறிந்து, வா்த்தக வாய்ப்புகளை அதிகரித்து கொள்ளலாம். இந்த அரங்கம் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் லலித்குமாா் மன்சுகானி, கோட்ட பண்டக மேலாளா் அவ்வாரு கிரண் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில்களில் (06063/06064) கூடுதலாக ஒரு குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 6 பெட்டிகள் ), மதுரை - புனலூா் - மதுரை சிறப்பு ரயில்களில் (06729/06730) ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 8 பெட்டிகள்), ராமேசுவரம் - ஓகா- ராமேசுவரம் சிறப்பு ரயில்களில் (06733/06734) கூடுதலாக ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி (மொத்தம் 3 பெட்டிகள்) மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 4 பெட்டிகள்) இணைக்கப்பட்டுள்ளன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments