முகப்பு
மதுரை

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 9:32 pm IST
பகிர்:

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த கணேசன் மகள் நித்தியா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், தனது பாட்டி பராசக்தி வீட்டில் வசித்து வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நித்யாவைக் காணவில்லை.

சனிக்கிழமை காலை வீட்டின் அருகே கிணற்றில் அவா் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினா் நித்யாவின் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.