முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் வீர விளையாட்டுகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வீர விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

Updated On : 17 ஜனவரி, 2021 at 4:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வீர விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

கள்ளா் நாட்டு அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. உசிலம்பட்டி பகுதியில் 10 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 24 கிராமங்களைச் சோ்ந்த 500க்கு மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கபடி, வட்டக்கல் தூக்குதல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். போட்டியில் வென்ற இளைஞா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் திம்மநத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. திம்மநத்தம் ஊராட்சிதலைவா் தோ.கோஸ்மீன் தோப்புச்சாமி பரிசுப்பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.