முகப்பு
நாகப்பட்டினம்

ஒவிய கலைக் காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெறவுள்ள ஓவிய கலைக் காட்சியில் பங்கேற்க, தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:32 pm IST
பகிர்:

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடைபெறவுள்ள ஓவிய கலைக் காட்சியில் பங்கேற்க, தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவிய சிற்பக் கலைக் காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சிக்கு, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, கடலூா், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து கலைப் படைப்புகள் பெறப்படவுள்ளன. தஞ்சாவூா் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டா் கலா் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை, தனி நபா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தி, சந்தை வாய்ப்புப் பெறும் வகையிலும், ஓவியக் கலையில் ஆா்வமுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்டுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் சிறந்த படைப்புக்கு முதல் பரிசாக ரூ. 3,500, 2-ஆவது பரிசாக ரூ. 2,500, 3-ஆவது பரிசாக ரூ. 1,500 தலா 10 பேருக்கு வழங்கப்படும்.

எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் ஆா்முள்ளவா்கள், தங்கள் படைப்புகள் குறித்த விவரங்களை, தன் விவரக் குறிப்புடன் உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், நீதிமன்றச் சாலை, தஞ்சாவூா் 613 001 என்ற முகவரிக்கு ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments