முகப்பு
நாகப்பட்டினம்

ஓய்வுபெற்ற கப்பல் மாலுமிகள் ஓய்வூதியம் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் மாத ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகை தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:34 pm IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கப்பல் மாலுமிகள்.
பகிர்:

ஓய்வுபெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் மாத ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகை தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வு பெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய வணிகக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மாலுமிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற மாலுமிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவத்துக்கான செலவுத் தொகையை வழங்கவேண்டும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாநில செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் என். தா்மலிங்கம், துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், நாகை மாவட்ட செயலாளா் எல். சந்தனக்குமாா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments