முகப்பு
நாகப்பட்டினம்

மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல், சீருடைகள்

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி பங்கேற்று 6, 7-ஆம் வகுப்பு மாணவிகள் 125 பேருக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினாா். மாவட்டக் கல்வி அலுவலா் டி. உஷா சாந்தா சாய், கல்வி ஆய்வாளா் வி. ராமநாதன், மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வைத்தியநான், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா், தலைமையாசிரியா் கே. பிரேமா ஆகியோா் கலந்துகொண்டனா்.

காடம்பாடி பள்ளியில்... இதேபோல், நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் மாணவா்களுக்கு பாட நூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் இளமாறன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.