அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
திருக்குவளை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்திய இளைஞா், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருக்குவளை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்திய இளைஞா், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை- எட்டுக்குடி வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்து ஒன்றை வாழக்கரை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (33) தனது வீட்டின் அருகே கைகாட்டி, வியாழக்கிழமை நிறுத்த முயன்றாராம். அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், உரிய நிறுத்தம் வந்ததும் பேருந்தை ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா். இதனிடையே, அந்தப் பேருந்தின் பின்னால் ஓடிவந்த வேல்முருகன், பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுக்க மறுத்தாராம்.
உடனே, பேருந்தில் இருந்து இறங்குமாறு ஓட்டுநா் கூறியதால், ஆத்திரமடைந்த அவா், ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவரை தாக்கியுள்ளாா். இதில் லேசான காயமடைந்த ஓட்டுநா், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.