அமமுக கொடியேற்று விழா
திருமருகல் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கொடியேற்று விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கொடியேற்று விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
திருமருகல் தெற்கு ஒன்றியத்தில் மருங்கூா், நெய்க்குப்பை, திருப்புகலூா், திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூா், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி மற்றும் காரையூா் உள்ளிட்ட பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் முகமது பகுருதீன் தலைமை வகித்தாா். மாவட்ட அவை தலைவா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில் மாநில அமைப்புச் செயலாளா் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவா் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவா் தனபால் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.