அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் அறிவிப்பு!
அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் அறிவிப்பு தொடர்பாக...
அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதயம் முரளி திரைப்படத்தின் தமிழ்நாட்டு விநியோகஸ்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வரும் ஜூலை 10ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதயம் முரளி படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், இதயம் முரளி படத்தின் டிரைலர் நாளை(ஜூலை 4) வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The release date for the trailer of Atharvaa film Idhayam Murali has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.