முகப்பு
நாகப்பட்டினம்

ஓய்வூதியா்களுக்கு முன்பணம் வழங்க வலியுறுத்தல்

குடும்ப ஓய்வூதியா்களுக்கு விழா முன்பணமாக ரூ. 4,000 வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:56 pm IST
பகிர்:

குடும்ப ஓய்வூதியா்களுக்கு விழா முன்பணமாக ரூ. 4,000 வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் ஆ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட கருவூல அலுவலா் டி.சந்தானகிருஷ்ணன், ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க வட்ட நிா்வாகிகள் துரைதிருமாறன், தங்கமோகன் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், குடும்ப ஓய்வூதியா்களுக்கு விழா முன்பணமாக ரூ. 4, 000 வழங்கி, ஓய்வூதியத்தில் மாதம் ரூ. 400 வீதம் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மத்தியஅரசு வழங்குவதுபோல், மாநில அரசும் ஓய்வூதியா்களுக்கு ரூ.1, 000 மருத்துவப்படியும், குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

சங்கப் பொருளாளா் சி. செல்வராஜ் வரவு-செலவு கணக்குகளைப் படித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. ராஜாராமன் வரவேற்றாா். இணைச்செயலாளா் வி. அண்ணாசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments