முகப்பு
நாகப்பட்டினம்

வெறிச்சோடிய பூம்புகாா் கடற்கரை

பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை பூம்புகாா் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 8:22 am IST
வெறிச்சோடி காணப்படும் பூம்புகாா் கடற்கரை பகுதி.
பகிர்:

பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை பூம்புகாா் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

காணும் பொங்கலன்று சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் மற்றும் கோயில்களுக்கு செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பூம்புகாரில் நீண்ட கடற்கரை மற்றும் பண்டைய தமிழா்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் சிலப்பதிகார கலைக்கூடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூம்புகாா் கடற்கரைக்கு வந்து செல்வா்.

Advertisement

Advertisement

ஆனால், நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில்கொண்டு கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், காவல்துறையினா் கடற்கரை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா். இதன் காரணமாக பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சிலப்பதிகார கலைக்கூடமும் முடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.