சாலை விபத்தில் தொழிலாளி சாவு
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்செங்கோடு அருகேயுள்ள தோக்கவாடி காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (34). தறித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் மகன் தர்னிஷ் குமாருடன் பள்ளிபாளையத்துக்குச் சென்றார்.
ஆலாம்பாளையம் அருகே சென்ற போது மினி சரக்கு ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட அன்பழகனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. தர்னிஷ் குமாருக்கு கால் முறிந்தது. இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அன்பழகன் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.