திருச்செங்கோடு எஸ்பிகே பள்ளி நூறு சதம் தேர்ச்சி
திருச்செங்கோடு எஸ்பிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சத தேர்ச்சியைப் பெற்று சிறப்பிடம் பெற்றது.
திருச்செங்கோடு எஸ்பிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சத தேர்ச்சியைப் பெற்று சிறப்பிடம் பெற்றது.
மாணவர் ஜி. பவிஷ்குமார் 1200க்கு 1181 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஜி. தாமோதரன் 1165 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், சி. நவீன்குமார் 1158 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளி நூறு சத தேர்ச்சியைப் பெற்றது. கணிதப் பாடத்தில் மாணவர் பவிஷ்குமார், வேதியியலில் தாமோதரன் 200க்கு 200 பெற்றனர். கணினி அறிவியல் பாடத்தில் பவிஷ்குமார், எம்.சி. அருள்செல்வன், நகுலன், நவீன்குமார், பி. மணிகண்டன் ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வில் இந்தப் பள்ளியின் சராசரி மதிப்பெண் 1074 ஆகும்.
பவிஷ்குமார், தாமோதரன் ஆகியோர் தமிழில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
Advertisement
இந்தத் தேர்ச்சி குறித்து, பள்ளியின் தாளாளர் செங்கோடன் கூறியது:
தரமான கல்வியைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 475 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் வசூலிக்கப்படாது.
470 முதல் 474 மதிப்பெண்கள் வரை பெறுபவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதம் சலுகையும், 450 முதல் 469 மதிப்பெண்கள் வரை பெறுபவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 25 சதம் சலுகையும் அளிக்கப்படும்.
10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வைக்க தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆங்கிலத்தில் சரளமாகப்பேச திறமைவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.