முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் அம்மன் தேர் வீதி உலா

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை

Updated On : 11 மே 2013, 12:22 pm IST
பகிர்:

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மன் தேர் வீதி உலா வந்தது.

திருச்செங்கோடு  ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா வரும் 16-ஆம் தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அம்மன் தேர் அமாவாசை இரவில் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வரும். இதை பிள்ளையார் தேர் எனவும்  கூறுவர். மிகவும் சிறிய தேராக இருப்பதால் சிறுவர்கள் மட்டுமே இதை இழுத்து வருவார்கள். இரவில் வருவதால் இருட்டுத் தேர் என்றும் அழைக்கப்பட்டு பின்னர் காலப் போக்கில் மருவி திருட்டுத் தேர் என்று அழைக்கப்படுகிறது. 

தேரில் அம்மன் எழுந்தருளியவுடன் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, தேர் இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தபோது  மக்கள்  அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.