முகப்பு
நாமக்கல்

மே 13 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட

Updated On : 11 மே 2013, 12:22 pm IST
பகிர்:

இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 13ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2013-2014ஆம் கல்வியாண்டில் அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், மீன் வளம், உணவுத் தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில் நுட்பப் படிப்புகளுக்கான இளங்கலை பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல் லத்துவாடியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையத்திலும், நாமக்கல் - திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்திலும் திங்கள்கிழமை (மே 13) முதல் வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.600,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300 ஆகும்.

கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு அந்த ரசீதுடன் விண்ணப்பக் கடிதத்தை இணைத்து அளித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அவற்றை ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் குறித்த வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04286  266491, 04286  220650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.