முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On : 11 மே 2013, 12:24 pm IST
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

 இந்தப் பள்ளி  மாணவர் எஸ். அரவிந்த் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார். பாட வாரியாக இவரது மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-186, இயற்பியல்-198, வேதியியல்-199, கணிதம்-200, கணினி அறிவியல்-200.

 மாணவர்கள் எம்.ஷேக் முகம்மது முபராக், ஜி.அரவிந்த் ஆகியோர் 1179 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். மாணவர் ஷேக் முகமது முபாரக் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-195, ஆங்கிலம்-190, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-199, கணிதம்-199.  ஜி.அரவிந்த் பெற்ற பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-189, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-197, கணிதம்-200.

Advertisement

Advertisement

 மாணவர் ராகுல் சித்தார்த் 1178 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-194, ஆங்கிலம்-187, இயற்பியல்-199, வேதியியல்-200, உயிரியல்-199, கணிதம்-199.

   இயற்பியல் பாடத்தில் 3 பேரும், வேதியியலில் 39 பேரும், உயிரியலில் 18 பேரும், கணிதத்தில் 58 பேரும்,  கணினி அறிவியலில் 8 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99.7 சதம். 

 இந்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகிகள் எம்.குமரவேல், பி.சுவாமிநாதன், ஏ.ராமசாமி, எஸ்.செல்வராஜன், ஆர்.துரைசாமி, பி.சத்தியமூர்த்தி,  தலைமையாசிரியர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.