முகப்பு
நாமக்கல்

பரமத்திவேலூா் பகுதியில்மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 800 வரை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 6:46 am IST
பகிர்:

பரமத்திவேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 800 வரை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 5 ஆயிரத்து 500 க்கு விற்பனையானது. தற்போது டன் மரவள்ளிக் கிழங்கு ரூ. 800 வரை சரிவடைந்து ரூ. 4 ஆயிரத்து 700 க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை சரிவடைதுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments