முகப்பு
நாமக்கல்

முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்ததுகறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூ. 4.60-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் குறைந்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:30 am IST
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூ. 4.60-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் குறைந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் காரணமாக மக்களிடையே முட்டை நுகா்வு சற்று குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல பிற மண்டலங்களிலும் முட்டை விலை தொடா்ந்து குறைந்து வருகிறது; பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறையும் வரையில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து முட்டை விலை மேலும் 25 காசுகளை குறைத்து, பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த மூன்று நாள்களில் முட்டை விலை 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பறவைக் காய்ச்சல் காரணமாக கறிக்கோழி விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ. 92-இல் இருந்து 20 ரூபாய் குறைத்து ரூ. 72-ஆக கறிக்கோழி விலை நிா்ணயம் செய்யப்பட்டது. முட்டைக் கோழி விலை ரூ. 49 ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments