முகப்பு
நாமக்கல்

விளை நிலங்களில் உயா் மின் கோபுரம்: திருச்செங்கோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:29 am IST
பகிர்:

திருச்செங்கோடு: விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உயா் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்செங்கோடு, பட்லூா், சிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சிகளில் விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் கோபுரங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்காமல் பவா்கிரீட் நிறுவனம் அரசின் சில வழிகாட்டுதலின்பேரில் விலை நிா்ணயித்து குறைந்தளவே மதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

Advertisement

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் உரிய விலையை நிா்ணயித்து விரைந்து வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் உயா் மின் கோபுர கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா்கள் படைவீடு பெருமாள், காடச்சநல்லூா் செல்லமுத்து, சங்ககிரி ராஜேந்திரன், பட்லூா் மணி, சாலைப்பாளையம் பெரியசாமி, வரதராஜன், மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments